3 Million Facebook பயனாளர்களின் தகவல்கள் கசிந்தது


3 Million Facebook பயனாளர்களின் தகவல்கள் கசிந்தது




     Facebook பயனாளர்களின் தகவல்கள் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வித பாதுகாப்பும் இன்றி இணையத்தில் காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் “myPersonality” என்ற Application ஆகும்.


     இந்த Application ஆனது Facebook பயனாளர்களுக்கான மனவியல் பரிசோதனைகளை நடத்தி முடிவுகளை உடனுக்குடன் வழங்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த Application ஆகும்.




     இவர்கள் பயனாளர்களிடம் பயம், மனசாட்சி, வெளிப்படை தன்மை, அனுபவத்தை எதிர்கொள்ளும் மற்றும் ஒப்புகொள்ளும் தன்மை போன்ற ஐந்து கேள்விகளை கேட்டு அதற்கான முடிவினை வழங்கி வந்தனர். இந்த அந்தரங்க தகவல்களை வழங்கிய 3 Million பயனாளர்களின் தகவல்களே கசிந்துள்ளன.


     இந்த தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரின் தகவல்களும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தின் Psychometrics என்ற தரவுகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் David Still Well & Michal Kosiniski கட்டுப்பாட்டில் இருந்தது. அனால் இதற்கான Password தனியான GitHub என்ற இடத்தில காணப்பட்டது.


     இவற்றிட்கூடாக வெறும் ஒரு நிமிடத்திலேயே தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதனை அறிந்த Facebook நிறுவனம் உடனடியாக அந்த Application உட்பட இவ்வாறான 200 இக்கும் மேற்பட்ட Application ஐ தடை செய்துள்ளது.


     இதில் வெளியான தகவல்கள் யாரெல்லாம் எடுத்துள்ளனர் எந்த வழிகளில் துஸ்பிரயோகம் செய்ய உள்ளனர் என்ற தகவல் யாருக்கும் தெரியாது இது இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents